உள்நாடு

சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி, டிசம்பர் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் 05 ஆம் திகதி முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரை இணையவழி முறைமை ஊடாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு:

தொலைபேசி எண்கள்: 1911/ 0112784208/ 0112784537/ 0112785922
மின்னஞ்சல்: gcealexam@gmail.com

Related posts

சிவனடி பாத மலைக்கு புதிய மின் மாற்றிகள் – தொடரும் பணிகள்.

உடனடியாக எரிபொருள், மின்கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும்

புகழ் பெற்ற நடிகை மாலானி பொன்சேகாவின் இறுதி நிகழ்வு – அரச கௌரவத்துடன் 26 ஆம் திகதி சுதந்திர சதுக்க வளாகத்தில்

editor