போலியான பிறப்புச் சான்றிதழைக் காட்டி சட்டவிரோதமாக இராஜதந்திர கடவுச் சீட்டைப் பெற்றதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் ஒருவரின் மனைவியான சஷி வீரவன்சவுக்கு எதிரான வழக்கின் சாட்சிய விசாரணையை நவம்பர் 11 ஆம் திகதி நடத்த கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷனா கெகுனுவெல இன்று (01) உத்தரவிட்டார்.
வழக்கு அழைக்கப்பட்டபோது பிரதிவாதி சஷி வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்குத் தொடுநரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திரிபா பீரிஸ், சிறப்பு நாடாளுமன்றக் குழுவின் முன் சாட்சிய விசாரணைக்காக ஆஜராகி வருவதால், அரசு தரப்பு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சமிந்த என்ற நபர் தாக்கல் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, திருமதி சஷி வீரவன்ச மீது குற்றப் புலனாய்வுத் பிரிவு இந்த
வழக்கைப் பதிவு செய்தது.
அரசு வழங்கும் இந்த கடவுச் சீட்டைப் பெறுவதற்காக 2010 அக்டோபர் 13 ஆம் திகதி குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம் போலி பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.