அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் கமூத் அல் கஹ்தானிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (16) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது சமகால விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.