உள்நாடு

சவுதியில் உள்ள இலங்கையர்களுக்கு சலுகை

(UTV | கொழும்பு) – சவுதி அரேபியாவில் இருந்து வௌியேறும் இலங்கையர்களிடம் எவ்வித கட்டணங்களையும் அறவிடாதிருக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது நிலவும் கொரோனா அபாய நிலைமை காரணமாக சவுதி அரசாங்கம் தற்காலிகமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றுக் காரணமாக சவுதி அரேபியாவில் இருந்து வெளியேற முடியாதுள்ள இலங்கையர்களின் நுழைவு அனுமதி காலாவதியாகி இருப்பினும் தற்போது அந்த நாட்டின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக வெளியேற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தற்போது சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறி வரும் இலங்கை பணியாளர்களுக்கு அரசாங்கம் குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு அந்தோனியார் தேவாலயத்தில் நுழைய முற்பட்ட நபரால் பரபரப்பு!!

இஷாரா செவ்வந்தி தொடர்பில் வெளியான தகவல்

editor

பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இரத்து