வகைப்படுத்தப்படாத

சவுதிஅரேபியாசவுதிஅரேபியாவில் ஆப்பிள்-அமேசான் நிறுவனங்கள் முதலீடுவில் ஆப்பிள்-அமேசான் நிறுவனங்கள் முதலீடு

(UTV|SAUDI ARABIA)-ஆப்பிள் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் சர்வதேச நாடுகளில் முதலீடு செய்து தனது வர்த்தகத்தை பெருக்கி வருகின்றன. அரேபியா நாடுகளில் ஒன்றான சவுதிஅரேபியாவில் நேரடியாக வர்த்தக முதலீடு செய்யாமல் 3-வது நிறுவனம் மூலம் தனது தயாரிப்புகளை சவுதி அரேபியாவில் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், தங்களது தயாரிப்புகளை சவுதி அரேபியாவில் நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்காக சவுதி அரேபியாவில் வர்த்தக முதலீடு செய்கிறது.

அதற்கான லைசென்சு பெறுவது குறித்து சவுதி அரேபியாவின் வெளியுறவு வர்த்தக முதலீடு குழுமம் ‘சாகியா’வுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.

ஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரை வருகிற பிப்ரவரியில் ‘சாகியா’ அமைப்புடன் முதலீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து 2019-ம் ஆண்டில் சில்லரை விற்பனை நிலையங்கள் தொடங்கப்படுகிறது.

‘அமேசான்’ நிறுவனத்தின் பேச்சு வார்த்தை தொடக்க நிலையில் உள்ளது. எனவே ஒப்பந்தம் எப்போது நடைபெறும் என்று உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. கச்சா எண்ணையின் விலை சரிவால் சவுதிஅரேபியாவின் பொருளாதாரம் சரிவை சந்தித்தது.

அதை தொடர்ந்து சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், நிர்வாகத்தில் மறு சீரமைப்பு நடவடிக்கை மேற் கொண்டார். அதை தொடர்ந்து வெளி நாட்டு நிறுவனங்கள் சவுதி அரேபியாவில் வர்த்தக முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Special Traffic Division for Western Province – South soon

මෙරට මරණ දඩුවම වහා අත්හිටුවන්නැයි හියුමන් රයිට්ස් වොච් කියයි

முதல் குழந்தை பிறந்த 26 நாளில் மீண்டும் இரட்டைக்குழந்தை பெற்ற பெண்