அரசியல்உள்நாடு

சவால்களுக்கு முகம்கொடுத்து புத்திசாலித்தனமாக அவற்றை வெல்வோம் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

2026 புத்தாண்டு நமது தாய்நாட்டிற்கு சவாலான ஆண்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, அதை நன்கு அடையாளம் கண்டு, உணர்ச்சிகளுக்கு அல்லாமல், அறிவுக்கு இடமளித்து செயல்படுவதற்கு நாம் அனைவரும் இன்றே உறுதிபூணுதல் வேண்டும் என்று புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

எதிர்பாராத நெருக்கடி நிலைமையின் பின்னணியில் நாம் எதிர்கொண்ட பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்கள் புதிய பரிமாணத்திற்கு விரிவடைந்துள்ளன.

இந்த சவால்களை வெல்வதற்கு வெறும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் அல்லது திட்டங்கள் மூலம் முகங்கொடுப்பது கடினமாகும். எனவே ஒத்துழைப்பு இந்த தருணத்தில் சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் வேறு எந்த காலத்தைவிடவும் முக்கியமான அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஏமாற்றம் மற்றும் உதவியற்ற நிலையால் துன்புறுவதால் எதையும் செய்யாமல் இருப்பதன் மூலம் நிலைமை சிறந்த திசையில் மாறாது. மாற்றத்திற்குச் செய்ய வேண்டியது அனைவரும் எல்லோருக்காகவும் ஒன்றிணைந்து செயல்படுவதே. எனவே உடன்பட முடிந்த இடத்தில் உடன்படவும், உடன்பாட்டில் செயல்படவும் நாம் பணிவுடன் இருக்க வேண்டும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியது போல், உண்மை மற்றும் நீதி தொடர்பான விடயங்களில் பெரிய மற்றும் சிறிய பிரச்சினைகளுக்கு இடையே வேறுபாடுகள் இல்லை. ஏனெனில் மனிதர்களை நடத்துவது தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை.

இந்த சவாலான ஆண்டில் நமது சகோதர மக்கள் எதிர்கொண்டுள்ள ஒவ்வொரு பிரச்சினையையும் ஒரே மாதிரியாக கருதி தீர்வுகளை கண்டறிவதற்காக நாம் செயல்பட வேண்டும்.

அத்தகைய தொலைநோக்குப் பார்வை மற்றும் முன்னோக்குச் சிந்தனையுடன் செயல்பட அனைத்து மத தலைவர்கள், அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் நாட்டின் முழு மக்களுக்கும் தைரியமும் சக்தியும் கிடைக்கும் புத்தாண்டிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related posts

ராகம ரயில் நிலையத்துக்கு அருகில் இரு ரயில்கள் மோதி விபத்து

ஞானசார தேரருக்கு பிடியாணை

மேலும் 3 பேர் பூரண குணம்