உள்நாடு

சலூன்களும் விலைகளை அதிகரித்தது

(UTV | கொழும்பு) – அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட​தை அடுத்து, வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ளது.

இதனை தாங்கிக்கொள்ளவதற்காக, சலூன்களில் முடிவெட்டுதல், முகச்சவரம் செய்தல் ஆகியவற்றுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.

கொழும்பு உள்ளிட்ட ஏனைய நகரங்களிலுள்ள சலூன்களிலும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஹட்டன்- டிக்கோயா முடித்திருத்துவோர் சங்கத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், முடி வெட்டுவதற்காக 300 ரூபாய், தாடி
வெட்டுவதற்கு 200 ரூபாய், சிறுவர்களுக்கு முடி வெட்டுவதற்கு 200 ரூபாய், முடியை வெட்டி வர்ணம் ​பூசுவதற்கு 800 ரூபாய், மசாஜ் செய்வதற்கு 200 ரூபாய் என விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த விலை அதிகரிப்பு தொடர்பில், சலூன்களில் விளம்பரங்களும் ஒட்டப்பட்டுள்ளன.

Related posts

எதிர்க்கட்சித் தலைவருக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு!

MT New Diamond கப்பல் தொடர்பில் இன்று ஆய்வு

“நாட்டு மக்களின் பிரச்சினைகளில் உணர்வற்றவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்”