சூடான செய்திகள் 1

சற்றுமுன்னர் மீண்டும் விசாரணை ஆரம்பம்

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் மனுத் தாக்கல் செய்துள்ளன.

 

 

 

 

Related posts

ஹஜ் பயண முகவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்

நுகர்வோர் அதிகாரசபையின் அனைத்து விசாரணை அதிகாரிகளும் தொழிற்சங்க நடவடிக்கையில்

வரலாற்றில் முதன்முறையாக டெஸ்டில் பெயர்-எண் கூடிய ஜெர்ஸி அறிமுகம்!