அரசியல்உள்நாடு

சர்வ ஜன பலய கட்சியைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் அப்துல் ஸமட் கைது

பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக சர்வ ஜன பலய கட்சியைச் சேர்ந்த லங்காபுர உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் மொஹமட் காசிம் அப்துல் ஸமட் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக நேற்றுமுன்தினம் (14) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அண்மையில் இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவத்தில் குறித்த நபரின் பற்கள் உடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மோதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன், மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

மரண விசாரணையின் போது திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டு, சடலத்தின் பகுதிகள் அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டிருந்தது.

தாக்குதல் சம்பவத்துடன் இணைந்தாக, குறித்த கொலை சம்பவம் தொடர்பாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சர்வ ஜன பலய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் மொஹமட் காசிம் அப்துல் சமத் இன்று காலை மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகை மதிப்பு 2024 அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது

editor

அரசியல் பழிவாங்கல்கள் – முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் நாளையுடன் நிறைவு

14 ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகும்

editor