அரசியல்உள்நாடு

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களை கௌரவித்த ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன

அண்மையில் நடைபெற்ற 3 ஆவது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி மற்றும் 4 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த ஆண், பெண் விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம் (13) சப்ரகமுவ மாகாண ஆளுநர் திருமதி சம்பா ஜானகி ராஜரத்னவின் தலைமையில் சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள பிரதான அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

4 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற
100 மீ. மற்றும் 100 ×4 மீ. போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வை.சி.எம். யோதசிங்க, மற்றும் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற எச்.எல்.என்.டி. லேக்கம்கே மற்றும்
100 ×4 மீ. போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆர்.எம்.ஆர்.கே. ரத்நாயக்க, மற்றும் 100 ×4 மீ. போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற டி.டி.எஸ். தியலவத்த மற்றும் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆர்.எம்.எஸ்.ஜே. ரணசிங்க 110 மீ. தடை தாண்டி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆர்.ஆர்.டி. ரணதுங்க, 400 மீ. தடை தாண்டி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற எல்.ஜி.ஏ. சத்சரணி, மற்றும் சுத்தியல் எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கே.கே.டி.எம். தர்மசேன ஆகிய வீரர்களும் மேலும் 3 ஆவது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் 1500 மீ. ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஜி.டி.எல். அசிந்த மற்றும் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கே.எச்.சி.எஸ். ஹேவகே ஆகிய வீரர்களும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்னவினால் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.

அத்துடன் மேற்படி வீரர்களின் பயிற்சியாளர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டன.

மேற்படி வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு சப்ரகமுவ மாகாண ஆளுநரின் வேண்டுகோளின் பேரில் சப்ரகமுவ மாகாண சபையால் தலா ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவும் (150,000), விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாவும் (50,000) வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ. சுனிதா, இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் கே.ஜி.எஸ். நிஷாந்த, சப்ரகமுவ மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சஞ்சீவ கொடெல்லாவத்த, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுனு ஆராச்சி, சப்ரகமுவ மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் சதுரங்கிகா பிரேமரத்ன, உதவி விளையாட்டுத்துறை பணிப்பாளர் அநுர வீரசூரிய உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

ஹெலிகொப்டர் விபத்து – விசாரணைக்கு விசேட குழு நியமனம்

மின்சார பஸ்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்!

மூட நம்பிக்கையால் 10 வயது சிறுவன் பலி