சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் 2025.10.05 திகதி அங்கொடையில் அமைந்துள்ள அஷ் ஷிஃபா அனாதை இல்லத்திற்கு விஜயம் செய்தனர்.
Amazon உயர்கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் இந்த சிறுவர்களோடு இணைந்து முழு நாளையும் அவர்களுடன் கழித்தனர். அவர்களுக்கு பல போட்டி நிகழ்ச்சிகளும் நடாத்தி பரிசில்களும், பகல் உணவும் வழங்கினர்.
இந்த சமூக அபிவிருத்தி திட்டத்தினை Amazon கல்லூரியின் மாணவர் குழு தலைவர் திரு Hassan Irfan தலைமையில், Amazon College & Campus சின் முழு அனுசரனையுடன் சிறப்பாக நடாத்தப்பட்டது.