உள்நாடுபிராந்தியம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு இன்று (24) காலை கல்முனை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வு கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில் கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி
ரம்சீன் பக்கீர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக பிரிவு வளவாளரான பொலிஸ் ஷார்ஜன் முகம்மட் பாரீஸ் கருத்துக்களை வழங்கினார்.

சிறுவர்களின் உரிமைகள் மற்றும் நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது சமூக ஊக்குவிப்புசிறுவர்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்ய சமூகம் ஒன்றிணைந்து செயல்படுவது சிறுவர்களின் உரிமைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் பிள்ளைகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவது பெற்றோர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரினதும் கடமையாகும் என விரிவாக ஆராயப்பட்டது.

இதன் போது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம். சுவர்ணகாந்தி, கல்முனை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொலிஸ் ஷார்ஜன் ஏ. ஆதம்பாவா மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், கல்முனை வடக்கு கிராம சேவகர் உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், மற்றும் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களும் செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், மகளிர் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவைகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் போன்றோரும் கலந்து கொண்டனர்.

சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான வாஹிட் ஏ.எல்.ஏ. வாஹிட் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

உலகளாவிய ரீதியில் சிறுவர்களை மகிழ்விக்கும் நோக்கிலும் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்குடனும் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் 1 ஆம் தேதி நாடு முழுவதும் மற்றும் பாடசாலைகளிலும் பல்வேறு சிறப்பான நிகழ்வுகள் நடத்தப்படும்.

இது சிறுவர்களின் நலன் மற்றும் உரிமைகளைப் பற்றி கவனம் செலுத்தும் ஒரு நாளாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

Related posts

மேலும் சில இலங்கைக்கான விமான சேவைகள் இரத்து

 03 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் விஜயதாச அறிவிப்பு.