விளையாட்டு

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராக தாமஸ் பேச்

(UTV |  ஜெனீவா) – ஜேர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞரான தாமஸ் பேச் நம்பிக்கை வாக்கெடுப்பில் 93-1 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்றார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக 67 வயதான தாமஸ் பேச் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞரான தாமஸ் பேச் நம்பிக்கை வாக்கெடுப்பில் 93-1 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்றார். ஆன்லைன் மூலம் உறுப்பினர்கள் சந்திப்பும், வாக்கெடுப்பும் நடந்தது. அவர் 2025-ம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிப்பார்.

தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த தாமஸ் பேச், கொரோனா கட்டுபாடுகள் இருந்தாலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி ஜூலை 23ம்  திகதி தொடங்கும் என்று மீண்டும் உறுதிப்பட கூறினார்.

Related posts

21ஆவது பொதுநலவாய விளையாட்டு – முதல் தினப் போட்டிகளில் களமிறங்கும் இலங்கையர்கள்

நாளை காலியில் இந்திய – இலங்கை மகளிர் கிரிக்கெட் போட்டி

IPL 2021 – பெங்களூர் அணிக்கு வெற்றி