சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண விற்பனை கண்காட்சி (2005- இலங்கை) இன்றையதினம் (15) பெல்மதுளை சில்வரே ஹோட்டல் மண்டபத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி கண்காட்சி இன்று (15) முதல் எதிர்வரும் 17ஆம் திகதிவரை மூன்று தினங்கள் நடைபெற உள்ளது.
மேற்படி கண்காட்சியில் பெறுமதிமிக்க இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணங்கள் கண்ணைக் கவரும் வகையில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதமர் ஹர்னி அமரசூரிய, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அமைச்சர் சுனில் அதுன்நெதி, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், கைத்தொழில் தொழில் முயற்சி பிரதி சதுரங்க அபே சிங்க, மற்றும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கைத்தொழில் தொழில் முயற்சி அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர்கள்,
உள்ளுராட்சி சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்