வகைப்படுத்தப்படாத

சர்வதேசத்திற்கான செய்தியை வழங்குவதற்கான சந்தர்ப்பமாக வெசாக் தினத்தை பயன்படுத்த வேண்டும் – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச சமூகத்திற்கு செய்தியை வழங்க இம்முறை வெசாக் நிகழ்வு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று   பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு மாநகர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள 100 விஹாரைகளுக்கு50 ஆயிரம் ரூபா வீதம் நிதியுதவிகளை வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று   அலரிமாளிகையில் இடம்பெற்றது. பிரதமர்  அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கொழும்பு மாநகர சபை வருடாந்தம் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்கிறது.

வெசாக் நிகழ்விற்கு அமைவாக இது ஒழுங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.. மஹாசங்கத்தினர் உட்பட பல பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.

Related posts

Kingswood, Vidyartha, St. Anthony’s and Dharmaraja promoted to division one

“කිරෙන් සපිරි දැයක්”- පාසල් දරුවන්ට දියර කිරි පැකැට්ටුවක් ලබාදීමේ ජාතික වැඩසටහන අදයි.

World Bank assures continuous assistance to Sri Lanka