அரசியல்உள்நாடு

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் – முஜிபுர் ரஹ்மான் எம்.பி வெளியிட்ட தகவல்!

சமீபத்தில் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கையின்படி, சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தனது அதிகாரங்களை மீறி கொள்கலன்களை விடுவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இதனுடன், தொடர்புடைய விசாரணை அறிக்கையையும் அவர் முன்வைத்தார்.

அறிக்கையின்படி, விடுவிக்கப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை 323 அல்ல, 309 ஆகும்.

அவற்றில் 151 சிவப்பு லேபள்களின் கீழ் வழங்கப்பட்டாலும் அவற்றில் 37 முறையான விதிமுறைக்கு உட்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

முடிவு எடுப்பதற்கு முன்பே 2 கொள்கலன்கள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தற்போதுள்ள சுங்கச் சட்டத்தின்படி, சிவப்பு லேபள் கொண்ட கொள்கலன்கள் சோதனை மற்றும் ஸ்கேன் ஆய்வுக்குப் பின்னரே விடுவிக்கப்பட வேண்டும் என்று தொடர்புடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கம் – புதிய வர்த்தமானி வெளியானது

editor

சிறுபோகத்திற்காக பொட்டாசியம் குளோரைட் உர இறக்குமதிக்கு அனுமதி

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் மஹிந்த ராஜபக்ஷ விசேட சந்திப்பு

editor