நாட்டின் சந்தையில் விற்கப்படும் 49 வகையான அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப் பொருத்தமற்ற அளவுகளில் கன உலோகங்கள் இருப்பதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் அவற்றில் முக்கியமானவை என்று அதிகார சபையின் போட்டித்திறன் ஊக்குவிப்பு பணிப்பாளர் சமந்தா கருணாரத்ன தெரிவித்தார்.
இணையம் வழியாகப் பொருத்தமற்ற அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.