உள்நாடு

சம்மாந்துறை வீரமுனை பிரதேசத்துக்கான வரவேற்பு வளைவு வழக்கு விசாரணை!

இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வுடன்  இணைந்து சாதகமான பல முடிவுகளை இந்த விடயத்தில் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டு  எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை குறித்த வழக்கு சம்மாந்துறை  நீதிவான்  நீதிமன்றினால்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை வீரமுனை பிரதேசத்துக்கான வரவேற்பு வளைவு   பிரதேச சபையின் அனுமதி இன்றி அமைக்க ஆரம்பித்தமை தொடர்பிலான வழக்கு வெள்ளிக்கிழமை (09) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதிவான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
அடுத்த தவணைக்கு முன்னதாக இரண்டு சமூகங்களும் மீண்டும் இணைந்து இந்த விடயத்தை எப்படித் தீர்த்துக் கொள்வது என்பதை குறித்து ஆராய்ந்து ஒரு இணக்கப்பாட்டுக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை வளைவு வழக்கு தொடர்பில் இரு  தரப்பினரையும் சம்மாந்துறை  நீதிமன்ற நீதிவான்  நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் மன்றில் அறிவுறுத்தினார்.
 
இதன்போது  இரு தரப்பினரதும் வாதப்பிரதி வாதங்களை ஆராய்ந்த நீதிவான் இரு தரப்பினரும் இணைந்து சாதகமான பல முடிவுகளை இவ்விடயத்தில் எடுத்திருந்த போதிலும் சரியான தெளிவின்மையான செயற்பாடுகள் காணப்படுவதனால் மீண்டும் ஒரு முறை  இரு  தரப்பினரும் குறித்த விடயத்தில் சமூக பொறுப்புகளை  உணர்ந்து செயற்பட வேண்டும் என நீதவான் அறிவுறுத்தினார்.

அத்துடன்  எதிர்வரும்  06.03.2026 திகதிக்கு முன்பாக இரு தரப்பினரும் குறித்த விடயத்தின் முடிஙை ஆரோக்கியமானதாக பெற வேண்டும் என  நீதிவான் மேலும்  குறிப்பிட்டார்.

அத்துடன்  இது அதிகாரம் சம்பந்தபட்ட விடயம் அல்ல என்பதுடன்  இந்த விவகாரம் சமூகம் சார்ந்த விடயம் எனவும் மீண்டும் குறிப்பிடப்பட்டார்

மேலும் பொதுநலமிக்க இவ்விவகாரத்தை இரு தரப்பினரும் பாரபட்சம் காட்டாமல் இணைந்து  தீர்க்கமான முடிவை அடுத்த வழக்கு தவணையின்போது தெரிவிப்பார்கள் என நீதிமன்றம் நீதிமன்றம் நம்பிக்கை வெளியிட்டது்.

குறித்த வழக்கில்  சம்மாந்துறை பிரதேச சபை சார்பில் சட்டத்தரணிகளான பௌஸான் சாமிளா  மற்றும் பிரதிவாதிகளான ஆலய நிர்வாகம் சார்பில் தமிழரசுக் கட்சியின் கல்முனை  தொகுதிக்கான இளைஞர் அணி தலைவரும் சட்டத்தரணியுமான அ. நிதான்சன் ஆகியோர் மன்றில் தோன்றி இருந்தனர்.

-அம்பாறை நிருபர் பாறுக் ஷிஹான்

Related posts

மர்ஹூம் காதர் முகைதீன் சேர் நினைவேந்தல் – அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது

editor

வங்காள விரிகுடா கடற்பரப்பில் தளம்பல் நிலை – மழை நிலைமை மேலும் வலுவடையும்

editor

அமைச்சர் விஜித ஹேரத் டாக்கா புறப்பட்டார்

editor