சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக டபிள்யூ.ஏ.என். பிரதிப் குமார இன்று (09) செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
போதை ஒழிப்பு மற்றும் சட்ட ஒழுங்கு நிலைமையை வலுப்படுத்தும் நோக்குடன் செயற்பட இருப்பதாகவும், சமூக நலனுக்கேற்ப குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக சமூகத்துடன் நெருங்கிய ஒத்துழைப்பில் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என புதிய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.பிரதிப் குமார அவர்கள் தனது உரையில் தெரிவித்தார்.
முன்னால் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் இடமாற்றமாக மொனராகலை மாவட்டம் பிபிலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக செல்லுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-தில்சாத் பர்வீஸ்