உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை புத்தகக் கண்காட்சி அப்துல் மஜீட் மண்டபத்தில் ஆரம்பமானது.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள நூலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த சம்மாந்துறை புத்தகக் கண்காட்சி அப்துல் மஜீட் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகர் எம்.எம்.ரிபாயுதீன், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.பஸ்மிலா, நூலகர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய தினங்களில் தினமும் காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை பொதுமக்கள் பார்வையிட முடியும்.

இக்கண்காட்சியில், சம்மாந்துறை எழுத்தாளர்களின் நூல்கள், பல்துறைப் புத்தகங்கள், சிறார்களுக்கு ஏற்ற வாசிப்பு நூல்கள், இலக்கியம், அறிவியல், வரலாறு, நாவல்கள் உள்ளிட்ட பல்வேறு வகை நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், விற்பனைக்கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன, அங்கு விலைக்கழிவுடன் புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் அப்பியாச கொப்பிகளை வாங்கிக் கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

-நூருல் ஹுதா உமர்

Related posts

அவசரகாலச் சட்டத்தை இலங்கை தவறாகப் பயன்படுத்துகிறது

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் 20 வயதுடைய இளைஞன் கைது

editor

New Diamond கப்பலின் கெப்டனிடம் வாக்குமூலம் பதிவு