உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை நெய்னாகாடு பகுதியில் நீரில் மூழ்கி 2 வயது சிறுவன் உயிரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெய்னாகாடு பகுதியில் இன்று (09) செவ்வாய்க்கிழமை 2 வயதுடைய சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்த சிறுவன் சிறாஜ் முகம்மட் ஸயான் ஸகி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-தில்சாத் பர்வீஸ்

Related posts

அமெரிக்கா ஜனாதிபதியிடம் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை

பசில் ராஜபக்சவின் கோரிக்கை : அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு?

பொதுச் சொத்துக்கள், சமூகத்தின் சொத்தாக பாதுகாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor