அரசியல்உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகர்த்த பொது மைதானத்தில் மர நடுகை நிகழ்வு!

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் ஆலையடிவட்டை மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் ஞாபகர்த்த பொது மைதானத்தின் சுற்றுப்புறத்தை பசுமைமயமாக்கும் நோக்கில், மரநடுகை நிகழ்வு நேற்று (16) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இதில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், சுற்றாடல் திணைக்கள பிரதிநிதிகள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்
உள்ளிட்ட பலரும் பங்கேற்றி மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.

இவ்வேலைத்திட்டம் அரச திணைக்களங்கள், சிறுவர் பூங்காக்கள், நூலகங்கள், மைதானங்கள், மையவாடிகள் மற்றும் பாடசாலைகள் என்பவற்றில் இடம்பெற்றது.

-தில்சாத் பர்வீஸ்

Related posts

மலையக கட்சிளுக்கும் ஜனாதிபதி ரணிலுக்குமிடையிலான சந்திப்பு ஒத்திவைப்பு!

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் உதுமாலெப்பை எம்.பி வெளியிட்ட தகவல்

editor

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தடை