உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கான நுகர்வேர் அலுவல்கள் அதிகார சபையின் விழிப்புணர்வு!

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நூகர்வேர் அலுவல்கள் அதிகார சபையினால் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வியாபார நிறுவனங்களின் உரிமையார்களுக்கான நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையில் விசேட விழிப்புணர்வு செயலமர்வு சம்மாந்துறை பிரதேச சபை ஏற்பாட்டில் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலமையில் நேற்று (07) சம்மாந்துறை பிரதேச சபை கூட்ட மன்டபத்தில் இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளாரின் வழிகாட்டலில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.

இந்த விழிப்புணர்வு செயலமர்வின் பிரதான வளவாளர்களாக நுகர்வேர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரி முஹம்மட் ஸாஜீத் ஸமான், புலனாய்வு அதிகாரிகளான எம்.எம்.எம் பஸ்மீர்,எ.பி.எம் இர்பான்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது நுகர்வோர் உரிமைகள், பொறுப்புகள்,சட்டங்கள்,பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் தொடர்பாக வர்த்தகர்களுக்கு விளக்கக்காட்சி ஊடாக தெளிவுபடுத்தப்பட்டது.

Related posts

மரதன் ஓட்ட போட்டியில் கலந்து கொண்ட மாணவன் மரணம்-திருக்கோவில் வைத்தியசாலை முன்பாக போராட்டம்

உணவு ஒவ்வாமை காரணமாக 28 மாணவர்கள் வைத்தியசாலையில்

பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ளும் அதேவேளை 2040 ஆம் ஆண்டாகும் போது பசுமை இலக்குகளை அடைந்துகொள்ள இலங்கை அர்ப்பணிக்கும்