அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையடிக்கிராமம் 01 பகுதியில் உள்ள வீடு ஒன்றினை சுற்றிவளைத்து சோதனை செய்த போது 2,055 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து (05) சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த கைது நடவடிக்கை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 2,055 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், மோட்டார் சைக்கிள்கள், கைப்பேசிகள் (மொபைல் போன்கள்) என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் வழிகாட்டுதலில், பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயஸீலன் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். ரிபாய்டீன் தலைமையிலான குழுவினரால் குறித்த கைது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ்
