சூடான செய்திகள் 1

சம்மாந்துறையில் இரு கைக்குழந்தைகள் கழுத்தறுத்து கொலை

(UTVNEWS | COLOMBO) -சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் பிரதேசத்தில் இரு கைக்குழந்தைகள் சுய நினைவற்ற தாயினால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளன.

10 மாதங்களான இரு பெண் குழந்தைகளே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நிந்தவூர் மௌலானா வீதியில் வசிக்கும் ஏ. சியாதுல் ஹக் மற்றும் என். அனிஷா ஆகியோர்களின் இரு பெண் இரட்டைக் கைக்குழந்தைகளே இவ்வாறு மரணமடைந்துள்ளன.

குழந்தைகளின் தந்தையான காலை 8.00 மணியளவில் குளியலறைக்குச் செல்லும் போது அங்கு தனது இரு இரட்டைக் குழந்தைகளும் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடப்பதனைக் கண்டுள்ளார்.
பின்னர் பொலிஸாரிற்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விஜயம் செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்

இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவு

அனைத்து மாவட்டங்களதும் இறுதி முடிவுகள்