சம்மாந்துறை பிரதேச சபையினால் அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் விஞ்ஞானப்பிரிவில் கல்வி பயிலும் மாணவி எம்.ஐ.எப்.ஹிமா, முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 10 கல்வி பயிலும் மாணவன் எம்.ஏ.ஏ.அஸ்ரிப், ஆகிய இரு மாணவர்களும் பாடசாலை ரீதியாக நடைபெற்ற புத்தாக்க போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றமைக்கு அனைத்து கௌரவ உறுப்பினர்களின் ஆதரவுடன், சம்மாந்துறை பிரதேச சபையின் 05ஆவது சபையின் 07ஆவது அமர்வு சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் சபா மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற பின்னர் குறிப்பிட்ட இரு மாணவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் பணப்பரிசு மற்றும் பெண்னாடை போர்த்தி, சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.
-சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ்
