சம்பத் மனம்பேரி தனது ஒருங்கிணைப்புச் செயலாளராகப் பணிபுரிகிறார் என்ற கூற்றுக்களை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று (05) மறுத்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற குருநாகல் மாவட்டப் பிரிவு அமைப்பாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை மற்றும் அவதூறானவை என்று தெரிவித்தார்.
இத்தகைய குற்றச்சாட்டுகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக சட்டரீதியான அதிகபட்ச நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் பெர்னாண்டோ மேலும் கூறினார்.
சமீபத்தில், “ஐஸ்” (Ice) போதைப்பொருள் தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டதன் தொடர்பில் கைது செய்யப்பட்ட மனம்பேரி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை 90 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.