உள்நாடுபிராந்தியம்

சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்பு

தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் தங்க முலாம் பூசப்பட்ட T 56 துப்பாக்கி , 115 தோட்டாக்கள், ஒரு கைக்குண்டு மற்றும் ஒரு கைத்துப்பாக்கி ஆகியவை மித்தெனியவில் உள்ள ஒரு காணியில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விசாரணையில் சந்தேக நபர் இந்த ஆயுதங்களை கடந்த 3 ஆம் திகதி புதைத்து வைத்திருந்தமை தெரிய வந்தது.

இதேவேளை, விசாரணைகளின்போது, ​​புதுக்குடியிருப்பு மற்றும் மன்னார் பகுதிகளில் இருந்து 3 முறை மொத்தமாக கஞ்சாவைக் கொண்டு வந்து வர்த்தகம் செய்ததாகவும், பெக்கோ சமனிடமிருந்து 10 கிலோ ஹெரோயினைப் பெற்று விற்பனை செய்ததாகவும் அவர் கூறினார்.

குற்றவாளிகளான பெக்கோ சமன் மற்றும் தம்பரி லஹிரு ஆகியோருக்குச் சொந்தமான துப்பாக்கிகளை தான் கொண்டு சென்றதாகவும், சம்பத் மனம்பேரி 3 T 56 துப்பாக்கிகள் மற்றும் 2 கைத்துப்பாக்கிகளை கொண்டு சென்றதாகவும் ஒப்புக் கொண்டார்.

Related posts

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது இன்று பாராளுமன்றத்திற்கு அருகில் இரவைக் கழிக்க தீர்மானம்

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித் கைது

editor

நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிப்பு