தடுப்பு காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாக கூறப்படும் பஸ் ஒன்றும், கார் ஒன்றும் மற்றும் ஒரு கெப் ரக வாகனத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால், சம்பத் மனம்பேரியின் மித்தெனிய பகுதியில் உள்ள வீடு சோதனை செய்யப்பட்ட போதே, குறிப்பிட்ட வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மித்தெனிய, தலாவ பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்திருந்தமை தொடர்பான சம்பவத்தில் சம்பத் மனம்பேரி அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பின்னர், அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்காக, கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
