உள்நாடு

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்கத் தேவையில்லை

(UTV | கொழும்பு) – நாட்டில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாத நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான அவசியமில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் சந்தை தொடர்பில் நேற்று (17) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரிசி, தேங்காய், பால் மா, மீன், இறைச்சி, முட்டை, பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, மரக்கறி மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றிற்கான நிவாரணங்களை நுகர்வோருக்கு வழங்குவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமரின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் நகர சபையின் முன்னாள் தலைவர் கைது

editor

ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் மீதான தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன் – முன்னாள் எம்.பி ஹரீஸ்!

editor

மிரிஸ்ஸ துப்பாக்கிச் சூடு சம்பவம்; துப்பாக்கிதாரி கைது