சூடான செய்திகள் 1

சமூக வலைத்தளங்கள் கண்காணிப்பு

(UTVNEWS | COLOMBO) – தேர்தல் காலப்பகுதியில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவர் ரஜீவ் யசிருவுடன், இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

சமூக வலைத்தளங்களின் ஊடாக, அவதூறை ஏற்படுத்தும் மற்றும் குரோதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்கள் வௌியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக ரஜீவ் யசிரு தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு

கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு

எட்டம்பிட்டிய காட்டுப் பகுதியில் தீப்பரவல்