உள்நாடு

சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய பெண் கைது

(UTVNEWS | கொவிட் – 19) – கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்பிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 50  வயதுடைய திவுல்தெனிய பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் இரு பெண்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தின் கணினி குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

வேட்பு மனுவை தாக்கல் செய்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

editor

2100 புதிய கிராம சேவகர்கள் நியமனம்! விவசாயத்தை முன்னேற்றாமல் கிராமத்தை முன்னேற்ற முடியாது:ஜனாதிபதி

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழப்பு