கிசு கிசு

சமூக வலைதளத்தில் முடக்கப்பட்ட இராஜ், பதவி இராஜினாமா

(UTV | கொழும்பு) –  சமூக வலைதள முகநூல் ஊடாக பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்னவின் கணக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபைக்கான உறுப்பினர் பதவியை இராஜ் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக விடயதான அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும், குறித்த கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், அவரது முகநூல் முடக்கத்திற்கான காரணம் இதுவரையில் தெளிவுபடுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், இராஜின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான பேஷல மனோஜ் இது தொடர்பில் முகநூல் பதிவொன்றினையும் பதிவிட்டு, அன்று நான் கூறியதை கேட்டிருந்தால் இன்று இந்நிலைமை வந்திருக்காது என தெரிவித்துள்ளார்.

Related posts

அரசின் தோல்வியில் தான் புர்கா, மாட்டிறைச்சித் தடை மேலெழுகிறது [VIDEO]

தஹமுக்கு போட்டியாக சமிந்த்ராணி

வேலைக்கு விண்ணப்பித்த சன்னிலியோன்?