உள்நாடு

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம் வியாழக்கிழமை விவாதத்திற்கு

(UTV | கொழும்பு) –   சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம் நேற்று (06) பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேற்றப்படவிருந்த போதிலும் விவாதம் அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதன் காரணமாக அது தொடர்பான விவாதத்தை எதிர்வரும் வியாழக்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதற்கான திருத்தங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோர் சபாநாயகரிடம் விவாதம் நடத்துமாறு கோரியதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. .

அதன்படி, வரும் வியாழக்கிழமை நடைபெறவிருந்த 2022ஆம் ஆண்டுக்கான மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை மீதான பேரவை ஒத்திவைப்பு மீதான விவாதம் வேறொரு நாளில் நடைபெறும்.

சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டமூலத்தை இன்று (06) பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேற்றுவதற்கு முன்னைய நாடாளுமன்ற விவகாரக் குழுவில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

2022 பட்ஜெட், அரசாங்க வருவாயை உயர்த்துவதற்கும், கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் ஒரு நடவடிக்கையாக சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை அறிமுகப்படுத்தியது.

Related posts

இலங்கைக்கு எவ்வித பயணத்தடையும் விதிக்கப்படவில்லை – அமெரிக்க தூதுவர்

editor

BREAKING NEWS – முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கைது

editor

ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருவதற்கு இன்று முதல் தடை