உள்நாடு

சமூகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது

(UTV | கொழும்பு) – சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசாங்கம் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த இரு நாட்களாக நாட்டில் மீளவும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் சுகாதார அமைச்சர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

“.. கடந்த இரண்டு நாட்களாக கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் பெருமளவான கொரோனா நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அங்கு தற்போது 250க்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த மையத்தில் கொரோனா கொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை எமக்கு பாரிய சவாலாக இருக்காது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம். நாட்டில் கொரோனா பரவலின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கின்றது.

குறித்த புனர்வாழ்வு முகாமில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருக்கலாம்.

எனினும், சமூகத்தில் வைரஸ் பரவாமல் தடுக்க அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்” அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தெரிவு

editor

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்

editor

PHI தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு