விளையாட்டு

சமிந்த எரங்கவின் பந்து வீச்சு சட்டரீதியானது

(UDHAYAM, COLOMBO) –  வேகப்பந்து வீச்சாளர் சமிந்த எரங்கவின் பந்து வீச்சு சட்டரீதியானது என சர்வதேச கிரிக்கெட் பேரவை  தீர்மானித்துள்ளது. இதற்கமையஇ எதிர்காலத்தில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.
கடந்த வருடம் இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற இரண்டாவது ரெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து எரங்கவின் பந்து வீச்சு சட்டவிரோதமானதென முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்திய கிரிக்கெட் அணி இம்மாதம்  இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. மூன்று டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.

Related posts

உலகக் கிண்ண போட்டிக்கு தசுன் ஷனக தலைமை தாங்குவார்!

T20 உலகக் கிண்ண போட்டிகள் 2022 ஆம் ஆண்டிற்கு ஒத்திவைப்பு

ஜூனியர் உலகக்கோப்பையில் சவால்களை கடந்து வெற்றி