அரசியல்உள்நாடு

சமிந்த்ராணி கிரியெல்ல எம்.பிக்கு காணி வழங்கிய விவகாரம்!

மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான ஹந்தான வட்டப் பகுதியில் 43 ஏக்கர் நிலம், காணி சீர்திருத்தச் சட்டத்ததுக்குப் புறம்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த்ராணி கிரியெல்லவுக்கு விடுவிக்கப்பட்டதாக கோப் குழு வெளிப்படுத்தியுள்ளது.

காணிச் சீர்திருத்த ஆணைக்குழு பொது வணிகங்களுக்கான நாடாளுமன்றக் குழுவின் (கோப்) முன் அழைக்கப்பட்டபோது இந்தத் தகவல் தெரிய வந்தது.

கோப் குழுவின் தலைவர் டாக்டர் நிஷாந்த சமரவீர எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம. பத்மசிறி லியனகே, சமிந்த்ராணி கிரியெல்லவுக்கு காணி வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று கூறினார்.

உந்த காணி தொடர்பாக 22 உரிமைகோருபவர்களும் 46 உரிமைகோராதவர்களும் இருப்பதாகவும் அவர்களில் எவருக்கும் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவினால் இதுவரை தங்கள் காணி மாற்றப்படவில்லை என்றும் பணிப்பாளர் நாயகம் பத்மசிறி லியனகே கூறியுள்ளார்.

Related posts

பிரித்தானியாவின் தடை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை

editor

சீமெந்தின் விலையை 100 ரூபாவால் குறைக்க தீர்மானம்

editor

முன்னாள் ஜனாதிபதி ரணில் லண்டன் செல்கிறார்

editor