உள்நாடுவிளையாட்டு

சப்ரகமுவ மாகாண மெய்வல்லுநர் போட்டி!

XLIX தேசிய விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு நடத்தப்பட்ட சப்ரகமுவ மாகாண மெய்வல்லுநர் போட்டியில் சிறந்த வீரராக K.M. யசிருவும், சிறந்த வீராங்கனையாக U.K.S.C.P. பண்டாரவும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேற்படி போட்டி கடந்த 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் ஹோமாகம, பியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இடம்பெற்றது.

சப்ரகமுவ மாகாண மட்டத்திலான இந்த விளையாட்டுப் போட்டியில், ஆண்களுககான முப்பாய்ச்சல் போட்டியில் 16.12 மீட்டர் தூரத்தைப் பாய்ந்து, போட்டித் தொடரின் சிறந்த வீரராக K.M. யசிரு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெண்கள் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் 55.04 விநாடிகளில் இலக்கை அடைந்த U.K.S.C.P. பண்டார, போட்டித் தொடரின் சிறந்த வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும், இந்த மெய்வல்லுநர் போட்டியில், ஆண்களுக்கான சாம்பியன்ஷிப்பை இரத்தினபுரி மாவட்டம் 102 புள்ளிகளுடன் வென்றது.

கேகாலை மாவட்டம் 60 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் வென்றது.

இதன்போது பெண்களுக்கான சாம்பியன்ஷிப்பை இரத்தினபுரி மாவட்டம் 103 புள்ளிகளுடன் வென்றது.

கேகாலை மாவட்டம் 59 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் வென்றது.

மொத்தப் போட்டிகளிலும் 614 புள்ளிகளைப் பெற்று இரத்தினபுரி மாவட்டம் சாம்பியன் பட்டத்தை வென்றது.

551 புள்ளிகளைப் பெற்ற கேகாலை மாவட்டம் இரண்டாவது இடத்தைப் வென்றது.

மேற்படி விளையாட்டுப் போட்டி சப்ரகமுவ மாகாண விளையாட்டு அமைச்சு மற்றும் மாகாண விளையாட்டுத் திணைக்களம் என்பன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

நுவரெலியா மாவட்ட வீரர்களுக்கான பாராட்டு விழா!

இரண்டு சகோதரர்களுக்கு இடையே கடுமையான மோதல் – பதுளையில் சம்பவம்

editor

புரட்சிகர மாணவர் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினர் மங்கள மத்துமகே கைது