அரசியல்உள்நாடுபிராந்தியம்

சப்ரகமுவ மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடமைப்பு நிதியுதவி வழங்கி வைப்பு!

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த ஆண்டுக்குள் நிதியுதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் ஐம்பது குடும்பங்களுக்கு நிதியுதவிக்கான காசோலைகள் வழங்கி வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் (23) சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

மாகாண ஆளுநர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

சப்ரகமுவ மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட
ஒரு குடும்பத்திற்கு வீடமைப்பு உதவித் தொகையாக இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வழங்கப்படுகிறது.

சப்ரகமுவ மாகாண சபையின் பிரதான அமைச்சின் கீழ், கிராமிய சமூகத்தின் உழைப்புப் பங்களிப்புடன் இந்த வீட்டுத்திட்டம் நிர்மாணிக்கப்படுகின்றன.

மேற்படி வறுமையான குடும்பங்களுக்கு வழகப்படும் இந்த தொகையை எதிர்காலத்தில் அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மேலும் தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாணத்தில் வீடமைப்பு உதவி பெறும் ஏனையோருக்கான காசோலைகள் இந்த ஆண்டுக்குள்ளேயே வழங்குவதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

சப்ரகமுவ மாகாண சபையின் பிரதான அமைச்சின் கீழ் உள்ள வீடமைப்பு த்தின் மூலம் இந்த வீடமைப்பு உதவித் தொகைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் புஷ்பகுமார திஸாநாயக்க, குருவிட்ட பிரதேச சபை தலைவர் விகசித புஷ்பசூரிய, எஹெலியகொட பிரதேச சபை தலைவர் பந்துசேன துனுவில, இரத்தினபுரி பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் அநுர பிரபாத், இரத்தினபுரி நகர சபையின் நகர சபை உறுப்பினர் நிமல் பத்மசிறி, சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ. சுனிதா, பணிப்பாளர் (திட்டமிடல்) எஸ்.கே. வீரசேகர, உதவிப் பணிப்பாளர் அனோமா ஆப்ரோவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

கொத்து, பிரைட் ரைஸ், பிரியாணி ஆகிய உணவுகளின் விலைகள் குறைகிறது

editor

இலங்கைக்கு 2, 500 பசுக்களை கொண்டுவர அரசு தீர்மானம்

பாணந்துறையில் ஒருவர் சுட்டுக் கொலை!

editor