அரசியல்உள்நாடு

சப்ரகமுவ மாகாணத்தில் அலுவல அபிவிருத்தி உதவியாளர்களாக 77 பேருக்கு நிரந்தர நியமனம்!

சப்ரகமுவ மாகாணத்தில் அலுவல அபிவிருத்தி உதவியாளர்களாக கடமையாற்றும் 77 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (10) சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் இரத்னபுரியில் அமைந்துள்ள சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது சப்ரகமுவ மாகாணத்தில் அலுவலகங்களில் பயிற்சியாளராக சேவையாற்றிய அபிவிருத்தி உதவியாளர்கள் 77 பேருக்கு நேற்றைய தினம் நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் சாந்த பத்மகுமார, பெருந்தோட்ட மற்றும் சமூக அபிவிருத்தி தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனக சேனாரத்ன, வசந்த புஷ்பகுமார, இரத்னபுரி மாநகர சபையின் நகரபிதா இந்திரஜித் கட்டுக்கம்பொல, சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ. சுனிதா, சப்ரகமுவ மாகாண பிரதி பிரதம செயலாளர்களான சுசீலா ராஜபக்ஷ, லக்மாலி யூ. குமாரி உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

-இரத்தினபுரி நிருபர் சிவா ஸ்ரீதரராவ்

Related posts

மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு – செந்தில் தொண்டமான் இரங்கல்

editor

கல்பிட்டியில் ஒரு தொகை மஞ்சள் கைப்பற்றல்

2026 இல் உள்ள அரச விடுமுறைகள் குறித்து வெளியான தகவல்கள்

editor