சூடான செய்திகள் 1

சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் கடும் மழை

(UTV|COLOMBO) சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமாக கடும் மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பிரதேசங்களில் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் தற்காலிக கடும் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேல் , வடமேல் , தென் மற்றும் ஊவா மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பாரிய மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் கோரியுள்ளது.

 

 

 

 

Related posts

அநுரவிற்கு அமெரிக்கா வாழ்த்து – இணைந்து செயற்பட தயார்

editor

இலஞ்சம் வழங்க முற்பட்ட நபரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

பொல்கஹவெல, பனலிய புகையிரத விபத்து தொடர்பில் ஆராய குழு