வரலாற்று சிறப்புமிக்க மகா சமன் தேவாலயத்தின் 800 ஆவது வருடாந்த மகா எசல ரந்தோலி பெரஹெர ஊர்வலம் கடந்த புதன்கிழமை 03 ஆம் திகதி ஆரம்பமானது.
சப்ரகமுவ மகா எசல பெரஹெர நிகழ்வு நாளை 07ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் எதிர்வரும் 08 ஆம் திகதி நீர் வெட்டு இடம்பெற உள்ளதாகவும் சமன் தேவாலயத்தின்
பஸ்நாயக்க நிலமே சங்க மாபிடிகம தெரிவித்தார்.
குறித்து பெரஹெர நிகழ்வில் சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, இரத்தினபுரி மாநகர சபையின் முதல்வர் கே.ஏ.ஆர்.இந்திரஜித் கட்டுகம்பளை, சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ.சுனீத்தா, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் கே.ஜி.எஸ். நிஷாந்த, உட்பட பலர் கலந்துகொண்டனர்.
-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்