உள்நாடு

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் – விசாரணைக்கு குழு!

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து விசாரிக்க சபரகமுவ பல்கலைக்கழக நிர்வாகக் குழு மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

இதற்கு சிரேஷ்டபேராசிரியர் ஏ.ஏ.வை.அமரசிங்க தலைமை தாங்பெகிறார்.

சம்பவம் தொடர்பாக அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 16 மாணவர்களிடமிருந்து இதுவரை சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

குறித்த மாணவரின் மரணம் குறித்து விசாரிக்க உயர்கல்வி அமைச்சும் விசாரணைக் குழுவை நியமித்துள்ளது.

புஸ்ஸல்லாவவில் உள்ள இஹலகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற இந்த இளைஞர் கடந்த 29 ஆம் தேதி இரவு உயிரை மாய்த்துக் கொண்டார்.

இறந்த சரித்தின் இறுதிச் சடங்குகள் நேற்று (02) நடைபெற்றன.

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு கல்விகற்ற சரித், புதிய மாணவர்களின் கொடுமைப்படுத்துதல் காரணமாக உயிரை மாய்த்துக. கொண்டதாக அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று சமனலவெவ பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்தது.

Related posts

நாளை பேருந்துகள் இயங்காது

ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து தீவிர பிரச்சாரம்

editor

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு