உள்நாடுவிசேட செய்திகள்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று (10) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.

எரிபொருள் அகற்றப்பட்ட எண்ணெய் தாங்கி ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட திருத்தப்பணியின் போது இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மற்றும் கொலன்னாவை தீயணைப்பு படைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்கள் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Related posts

தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து 31 பேர் வெளியேற்றம்

கிஹான் பிலபிட்டிய மீதான விசாரணை அறிக்கையை ஆராய 5 பேர் கொண்ட குழு நியமனம்

கட்டுநாயக்க விமான நிலைய வௌியேறும் பகுதி பொது மக்களுக்காக திறப்பு