(UTV|கொழும்பு) -சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விஷேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று இன்று(07) பிற்பகல் இடம்பெறவுள்ளது.
இதன்போது ரஞ்சன் ராமநாயக்க ஒப்படைத்துள்ள தொலைபேசி உரையாடல்கள் உள்ளடங்கிய இறுவட்டு(CD) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது தீர்மானம் ஒன்று எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்நது.
அத்துடன் அடுத்த பாராளுமன்ற கூட்டுத் தொடர் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
