அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு சபை இன்று கூடுகிறது

அரசியலமைப்பு சபை இன்று (7) கூடவுள்ளது.

அரசியலமைப்பு சபை பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது.

இதேவே​ளை, தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கடிதம் நேற்று (6) அவரிடம் கையளிக்கப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்று தொடர்புடைய கடிதத்தை வழங்கியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை சமீபத்தில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 177 வாக்குகள் கிடைத்ததோடு, எதிராக எந்த வாக்குகளும் வழங்கப்படவில்லை.

இருப்பினும், பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா மட்டுமே பிரேரணைக்கு வாக்களிப்பதில் இருந்து விலகி இருந்தார்.

அதன்படி, இது தொடர்பான கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நேற்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் கையொப்பமிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தேசபந்து தென்னகோனின் பதவி நீக்கக் கடிதத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி அனுப்பியுள்ளார்.

அதன்படி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் குறித்த கடிதம் தேசபந்து தென்னகோனிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

ஊரடங்கு சட்டம் நீக்கம்

இன்று நள்ளிரவு முதல் ரயில் பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு தீர்மானம்.

ஜனாதிபதி கெரவலப்பிட்டியவிற்கு திடீர் விஜயம்