உள்நாடு

சபாநாயகரின் விசேட கோரிக்கை

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு நிலையத்திற்கு கையடக்க தொலைபேசிகளை கொண்டு வர வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உரிய விதிகளுக்கு அமைவாக பாராளுமன்றத்தினால் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இன்றைய வாக்கெடுப்பில் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து அதனை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக சபாநாயகர் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1981 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் பிரகாரம் அனைத்து வழிகாட்டல்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இரகசிய வாக்கெடுப்பின் தேர்தல் அதிகாரியாக செயற்படும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

Related posts

தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

editor

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஸ்மார்ட் நூலகத்தின் பெயர் பலகை நீக்கம்

பிரதான மார்க்க ரயில் சேவைகள் வழமைக்கு