உள்நாடு

சன்னஸ்கல மற்றும் ஸ்ரீநாத் ஆகியோருக்கு நீதிமன்ற அழைப்பாணை

(UTV | கொழும்பு) –  சிங்கள ஆசிரியர்களான உபுல் சாந்த சன்னஸ்கல மற்றும் ஸ்ரீநாத் சதுரங்க ஆகியோரை எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள திலகரத்ன நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

புத்தரையும் பௌத்தத்தையும் இழிவுபடுத்தும் வகையில் ‘புத்தரின் ரஸ்தியாதுவ’ என்ற புத்தகம் எழுதப்பட்டு அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட சம்பவத்துடன் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

‘புத்தரின் ரஸ்தியாதுவ’ புத்தகத்தை எழுதி அச்சிட்டு விநியோகித்தவர்களை இந்த வழக்கில் சந்தேகநபர்களாக பெயரிடுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இந்நூலின் உள்ளடக்கங்கள் புத்தரை மிகவும் கீழ்த்தரமாகவும் இழிவாகவும் இழிவுபடுத்தும் வகையிலும் உள்ளதாக முன்னாள் உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ 2018 ஆகஸ்ட் 20ஆம் திகதி செய்த முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

பகிடிவதை தொடர்பில் விசாரணை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் பிரதமர் ஹரிணி

editor

இந்தியாவிலிருந்து ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

அரச ஊழியர்களின் பணிநேரம் குறித்து வௌியான சுற்றறிக்கை!