உள்நாடு

சந்தையில் உச்சம் தொட்ட வெற்றிலையின் விலை!

சந்தையில் வெற்றிலையின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பகுதியில் உள்ள வெற்றிலை கடைகளின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரிய வெற்றிலை ரூ. 10 ஆகவும், கம்பி வெற்றிலை ரூ. 8 இற்கும், சிறிய வெற்றிலை ரூ. 7 இற்கும் கிடைப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, 40 வெற்றிலை கொண்ட ஒரு கட்டு ரூ. 350 – ரூ. 450 வரை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெற்றிலை மட்டுமல்லாது பாக்கின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெற்றிலை மற்றும் பாக்கின் விலை அதிகரித்ததால் அன்றாட வர்த்தகம் வேகமாகக் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

அரசாங்கத்தை சாடும் இலங்கை ஆசிரியர் சங்கம்

துப்பாக்கிச் சூட்டில் சிறுத்தை பலி

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் திடீர் சந்திப்பு!