அரசியல்உள்நாடு

சதொச விவகாரம் – முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு – மீண்டும் விசாரணை ஆரம்பம்

முன்னாள் வர்த்தக அமைச்சராக பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து விலகச் செய்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிரான வழக்கு இன்று (26) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது, வந்திருந்த சாட்சியாளர்களிடம் இருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

பின்னர், மேலதிக சாட்சி விசாரணை பிற்போடப்பட்டது.

2010 முதல் 2014 வரையான காலப்பகுதியில் வர்த்தக அமைச்சராக பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து விலகச் செய்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்ணான்டோ மற்றும் முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளராக இருந்த மொஹமட் ஷாகீர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

Related posts

சூரிய மின்சக்தி அமைப்பு உரிமையாளர்களிடம் இலங்கை மின்சார சபை மீண்டும் கோரிக்கை

editor

 தமிழர் தரப்புக்கும் – அரசுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள பேச்சு வார்த்தை கடந்தகாலங்கள் போன்று மாறிவிடக்க்கூடாது

ஜனவரியில் இலங்கை வருகிறாா் ஜப்பான் நிதி அமைச்சர்!